முன்பதிவிற்கு
உங்களின் விலைமதிப்பில்லா புன்னகைக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்
கௌரிவாக்கத்தில் உள்ள எங்கள் மருத்துவமனை உங்கள் புன்னகையை மாற்றும் திறமை வாய்ந்தது
ஆலோசனை பெற
சிறப்பான பல் சிகிச்சைகள்

கௌரிவாக்கத்தின் தலை சிறந்த பல் மருத்துவர்

கௌரிவாக்கத்தில் சிறந்த பல் மருத்துவம் தேவையா? உங்கள் பார்வையை 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி மீது செலுத்துங்கள். எங்கள் நோக்கம், வசதியான, வலியற்றப் பல் சிகிச்சைகளை திறம்பட அளித்து, உங்கள் பல் ஆரோக்கியத்தை மீட்டுக் கொடுப்பதே ஆகும். சென்னையில் உள்ள எங்கள் பல் மருத்துவ நிபுணர்கள் குழு புதுமையான தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு பல் மருத்துவ சேவைகளை வழங்குவதில் முன்னோடிகளாக திகழ்கிறார்கள்.

அல்ட்ராமாடர்ன் உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன உபகரணங்களின் உதவியுடன் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பல் சிகிச்சை தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மேம்பட்ட பல் பராமரிப்பு சேவைகளை உங்களுக்காக நாங்கள் வழங்குகிறோம்.

மேலும் அறிய
Front image of 4 Squares Dentistry, Medavakkam
கௌரிவாக்கத்தில் உள்ள 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரியின் தனித்துவமான அம்சங்கள்
எங்கள் இலக்கு - அழகிய புன்னகை, ஆரோக்கியமான பற்கள்
உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், பல் வலியிலிருந்து விரைவில் விடுவிக்க தரமான பல் பராமரிப்பை வழங்குவதில் மிக்க பெருமிதம் கொள்கிறோம். சென்னை கௌரிவாக்கத்தில், மருத்துவமனையில் தனித்துவமான அணுகுமுறையை கடை பிடித்து வருகிறோம். அவ்வாறே எங்கள் நிபுணர்களின் பரிந்துரையின் பேரில், எங்கள் சிகிச்சை அணுகுமுறையை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம்.

கௌரிவாக்கத்தில் உள்ள முன்னணி பல் மருத்துவர்

Interior of 4 Square dentistry, Gowrivakkam
சிறப்பான பல் சிகிச்சைக்கு உறுதியளிக்கப்படுகிறது!

இன்று சென்னையில் 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி மிகவும் பிரபலமான மருத்துவமனையாக விளங்குகிறது. கௌரிவாக்கத்தில் உள்ள சிறந்த பல் மருத்துவமனைகளில் ஒன்றான இங்கு மிகவும் திறமையான, நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பல் மருத்துவர்களின் உதவியுடன் பல் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகிறது.

4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி சிறந்த நவீன சிகிச்சை நடைமுறைகளை வழங்குகிறது. இதில் பற்களை வெண்மையாக்கும் சிகிச்சைகள், பற்களை மறுசீரமைத்தல், பற்கள் இல்லாத இடத்தில் பற்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

பல் மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி நாங்கள் வழங்கும் கனிவான கவனிப்புடன் கூடிய சிகிச்சை எங்களை கௌரிவாக்கத்தின் சிறந்த பல் மருத்துவமனையாக மாற்றி உள்ளது.

சென்னையின் முக்கிய புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கௌரிவாக்கத்தில் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி பல் மருத்துவமனை அமையப்பெற்றுள்ளது. எங்கள் இருப்பிடம் சந்தோஷபுரம், ராஜகீழ்ப்பாக்கம் ஆகிய பகுதி வாழ் மக்களும் எங்களை எளிதில் அணுகும் படியாக அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனைக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகள் மருத்துவத்திற்காக வரும் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரின் காத்திருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாக்குகிறது.

கௌரிவாக்கத்தின் சிறந்த பல் பராமரிப்பு மையம்

Icon Skilled team of Dentist

நிபுணர் குழு

பண்பட்ட பல் நிபுணர்களின் தனித்துவமான அணுகுமுறை மூலம் செயல்படுத்தப்படும் தரமான சிகிச்சைகள் செயல்படுத்தப்படுகிறது.
Icon Skilled team of Dentist

உறுதியான பாதுகாப்பு

பாதுகாப்பு மற்றும் சுகாதார வரைமுறைகளை இணங்கிய மேம்பட்ட மருத்துவ முறைகள்.
Icon Skilled team of Dentist

நவீன வசதி

நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பெற்ற விசாலமான, இனிமையான உள்கட்டமைப்பு வசதிகள்.
Icon Skilled team of Dentist

அவாண்ட்-கார்ட் நுட்பங்கள்

சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன பல் நடைமுறைகளைப் பின்பற்றி நடக்கும் சிகிச்சை முறைகள்.
Icon Skilled team of Dentist

நம்பகமான சேவை

நியாயமான செலவில், திறமையான பல் மறுத்தவர்கள் மூலம் வழங்கப்படும் உலக தரம் வாய்ந்த சிகிச்சைகள்.
Icon Skilled team of Dentist

அனைத்து தீர்வுகளும் ஒரே இடம்

உங்கள் அவசர சிகிச்சைகள் மற்றும் அனைத்து பல் தேவைகளுக்கும் தீர்வு காண ஒரே இடம்.

உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கும் பல் மருத்துவமனை
உங்கள் கௌரிவாக்கத்தில்!

Dental clinic in Gowrivakkam with dental chair decorated with balloons, trees in the background

4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி, கௌரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த பல் பராமரிப்பு சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்ய நவீன மருத்துவ முறைகளை கையாள்கிறது. உங்கள் வாய் ஆரோக்கியத்தை ஆய்வு செய்து சிறந்த சிகிச்சையை பரிந்துரைக்க உள்முக கேமராக்கள், டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் பிற நவீன கருவிகளைப் பயன்படுத்துகிறது.

புதுவகை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் கீழ்காணும் நன்மைகள் கிடைக்கிறது:

  • பல் ஆய்வு படங்களை மதிப்பாய்வு செய்ய காத்திருக்க வேண்டியது இல்லை.
  • விரிவான படங்கள் மூலம் நுட்பமான நோயறிதல் மற்றும் துல்லியமான சிகிச்சையை உறுதி செய்தல்.
  • நோயாளிகள் பல் நிபுணரின் உதவியுடன் படங்களை பார்க்க முடியும்.
  • குறைந்த கதிர்வீச்சு வெளிப்பாடு நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • வசதியான நடைமுறைகள் மற்றும் விரைவான திட்டமிடல் செயல்முறைகள்.
Latest equipment and best dental treatments
கௌரிவாக்கத்தில் ஒரு சிறந்த பல் மருத்துவம் இருக்கிறது என்று உங்கள் நண்பர்கள் / குடும்பத்தினரிடம் சொல்ல நீங்கள் ஆர்வமாக இருந்தால், அது 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி பல் மருத்துவமனையாக தான் இருக்கும்.
முன்பதிவு செய்ய

எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வார்த்தைகள்

மேலும் கருத்துக்கள் அறிய

நீங்கள் எங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்

ஈறுகளில் இரத்தம் வராமல் தடுப்பது எப்படி?

ஈறுகளில் வீக்கம் அல்லது இரத்தக்கசிவு ஏற்படுவது ஈறு அழற்சி, ஈறு நோய் காரணமாக இருக்கலாம். நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கி பிளாஸ் செய்வதன் மூலம் இதனை எதிர்கொள்ளலாம். சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெறுவதற்கு தாமதம் செய்யாமல் கௌரிவாக்கத்தில் உள்ள உங்கள் பல் மருத்துவரைப் பார்ப்பது எப்போதும் நல்லது.

பல் எக்ஸ்ரே எடுப்பது பாதுகாப்பானதா?

கதிர்வீச்சு வெளிப்பாடு மிகவும் குறைவாக இருப்பதால், பல் எக்ஸ்-கதிர்கள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் பாதுகாப்பானவை. இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பல் எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனக்கு பற்கூச்சம் வாய்ந்த பற்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் வீட்டு வைத்தியம் உள்ளதா?

தகுந்த பற்பசை பயன்படுத்துவது உங்கள் பற்களின் உணர்திறன் சங்கடத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும். இதில் பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஸ்ட்ரான்ஷியம் குளோரைடு உள்ளது. இது உங்கள் பற்களின் நரம்பு முனைகளை எரிச்சலிலிருந்து பாதுகாக்கிறது. அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்களை நீங்கள் உட்கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.

இது பற்பசையின் செயலுக்கு எதிராக செயல்படும. மேலும் உங்கள் பற்கள் மீண்டும் உணர்திறன் கொண்டதாக உணரலாம். உங்கள் பற்களின் உணர்திறன் கூடுதலாக இருப்பின், தகுந்த நிவாரணத்திற்கு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.

நான் செயற்கைப் பற்களைப் பயன்படுத்துகிறேன். பல் மருத்துவ ஆலோசனைகளை நான் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்?

நீங்கள் செயற்கைப் பற்களைப் பயன்படுத்தினால், பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைவு. இருப்பினும், உங்களுக்கு வாய் புண்கள் ஏற்பட்டாலோ அல்லது பொருத்தமற்ற பல் உபகரணங்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, கௌரிவாக்கத்தில் உள்ள உங்கள் பல் மருத்துவரை நீங்கள் சந்திக்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாவிட்டால், உங்கள் கழுத்து, முதுகு மற்றும் பற்களின் முழுமையான பரிசோதனைக்காக வருடந்தோறும் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். உங்கள் பற்களை மாற்ற வேண்டுமா அல்லது சரிசெய்ய வேண்டுமா என்பதை உங்கள் பல் மருத்துவர் பரிந்துரைப்பார்.

எனது குழந்தையின் முதல் பல் பரிசோதனைக்காக நான் எப்போது பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?

3 வயதிற்குள் உங்கள் குழந்தையின் முதல் பல் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தையின் பற்களை தவறாமல் துலக்குவதை உறுதி செய்து, அவர்களின் பல் சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் பற்களில் ஏதேனும் துவாரங்கள், இரத்தப்போக்கு, கறை அல்லது கரும்புள்ளிகளை நீங்கள் கண்டால், உடனடியாக கௌரிவாக்கத்தில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்.
மேலும் அறியகுறைவாக காட்டு
Top