Logo of 4 Squares Dentistry
முன்பதிவிற்கு
கனிவான அக்கறையுடன் கூடிய பல் சிகிச்சை
உங்கள் விலைமதிப்பில்லா புன்னகையை மேம்படுத்த, சென்னையில் உள்ள எங்கள் மருத்துவமனை சிறந்த பல் சிகிச்சைகளை வழங்குகிறது.
முன்பதிவு செய்ய
Portrait of a young smiling female dentist standing in the dental office with her hands crossed
Evaluation at the premier Dental Clinic in Chennai

4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி:
சென்னையின் சிறந்த பல் மருத்துவமனை.

சென்னையில் கௌரிவாக்கம் மற்றும் மேடவாக்கம் ஆகிய இடங்களில் செயல்படும் 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி உலகத் தரம் வாய்ந்த பல் சிகிச்சை மையங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இங்கு நவீன நடைமுறைகளுடன் கூடிய சிறந்த பல் சிகிச்சை மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.

4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரியில் கைத்தேர்ந்த பல் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் அதி நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைத்து பல் சிகிச்சைகளும் சிறப்பாக வழங்கப்படுகிறது. இதனால் சென்னையின் சிறந்த பல் மருத்துவமனை என்ற நற்பெயரைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், உலகளாவிய தரத்திற்கு இணையான பல் சிகிச்சைகளை உங்களுக்கு வழங்குகிறது.

இந்த மருத்துவமனையில் வழக்கமான பல் பரிசோதனைகள், ரூட் கேனால் சிகிச்சை, பல் கறை நீக்கம் , பல் பதிய சிகிச்சைகள், சிறிய மற்றும் சிக்கலான பல் அறுவை சிகிச்சைகள் அனைத்தும் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் அக்கறையுடனும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு அளிக்கப்படும் பல் பராமரிப்பு, பற்களை வெண்மையாக்குதல், பல் வரிசை சீரமைத்தல் ஆகியவையும் அடங்கும்.

மேலும் அறிய

சிறப்பான பல் மருத்துவ சேவைகள்

4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி சென்னை கௌரிவாக்கம் மற்றும் மேடவாக்கத்தில் உள்ள சிறந்த மல்டி ஸ்பெஷலிட்டி பல் மருத்துவமனையாகும். இங்கு நன்கு பயிற்சி பெற்ற துணை ஊழியர்களின் உதவியோடு அனுபவம் வாய்ந்த பல் மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை வழங்குகிறார்கள். எங்கள் மருத்துவமனையில் பல் சம்பந்தபட்ட பல சங்கடங்களுடன் வரும் நோயளிகளுக்கு, இன்முகத்துடனும் கனிவான அக்கறையுடனும், நவீன முறை சிகிச்சை அளிப்பதே எங்களின் தலையாய நோக்கம். மேலும் இங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

Hand holding small waving flag in linear style to establish mission statements of 4SquareDentistry, Medavakkam, Chennai.

எங்கள் பணி

நோயாளிகளின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிப்பதே எங்களின் தலைமையான நோக்கம். வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அனைவரும் புரிந்துகொள்ளவும், பல் நோய் தடுப்பு பராமரிப்பை வழங்குவதற்கான அதிநவீன நுட்பங்களை பின்பற்றுவதிலும் 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி சிறப்பாக செயல்படுகிறது.
Linear eye inside 4 corner angled brackets to convey vision of 4SquareDentistry, Medavakkam, Chennai.

எங்கள் இலக்கு

எங்களின் வெற்றி இலக்கை நிர்ணயிக்க, நாங்கள் உங்களுக்கு 4 வாக்குறுதிகளை வழங்குகிறோம்:
No 1 inside badge assuring quality services from 4SquareDentistry, Medavakkam, Chennai

தரம் மற்றும் சுகாதாரமான பல் மருத்துவம்:

4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரியில் தரம் மற்றும் சுகாதாரம் தான் எங்களின் முதன்மை நோக்கம். மிகச்சிறந்த கவனிப்பை வழங்கும் பொருட்டு , தொற்றுக் கட்டுப்பாடு, மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றுதல் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய உயர்தர ஸ்டெரிலைசேஷன் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

No 1 inside badge assuring quality services from 4SquareDentistry, Medavakkam, Chennai

புதுமையான நுட்பங்கள் & ஆராய்ச்சிகள்:

4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி எப்போதும் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு பல் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த புதுமையான மருத்துவ தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியான கற்றல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
No 1 inside badge assuring quality services from 4SquareDentistry, Medavakkam, Chennai

நம்பகமான பல் சேவைகள்:

இந்த மருத்துவமனையின் வெற்றியானது, இங்கு வழங்கப்படும் பல் மருத்துவ சேவைகள் மீதான நோயாளிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்து உருவானது. நியாயமான செலவில், உயர் தரமான சிகிச்சை அளித்து, உங்களை விரைவாக குணமடைய வைப்பதே எங்களின் முதன்மையான பணி.
No 1 inside badge assuring quality services from 4SquareDentistry, Medavakkam, Chennai

பொறுப்பான சேவைகள்:

இந்த மருத்துவமனை பல் சிகிச்சை தேவைகளை எந்தவித தாமதமும் இன்றி வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இங்குள்ள மருத்துவர் குழு சிகிச்சை பணிகளை இரக்கத்துடனும், நோயாளிகளுக்கு நம்பிகை ஊட்டும் வகையில் வெளிப்படையாகவும், தொழில்முறை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும், சிகிச்சை பணிகளை மேற்கொள்கின்றனர்.

Logo of 4 Squares Dentistry
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பல் பிரச்சனைகளின் துவக்கநிலை மற்றும் அறிகுறிகள் என்ன?
பல் பிரச்சினைகளின் துவக்க நிலையில் வாய் துர்நாற்றம், இரத்தக்கசிவு, ஈறுகளில் வீக்கம், பல் கூச்சம், லேசான அல்லது கடுமையான வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம்.
ஒரு நல்ல பற்பசை மற்றும் பல் துலக்கும் பிரஷ்ஷை எவ்வாறு தேர்வு செய்வது?
புளோரைடு உள்ள எந்த பற்பசையையும் நீங்கள் பயன்படுத்தலாம். மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்கும் பிரஷ் சிறந்தது.
என் வாய் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ள பல் துலக்குவது மட்டும் போதுமானதா?
இல்லை. பல் துலக்குவது உங்கள் பற்களை சுத்தம் செய்து உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும். ஆனால், இது பல் சொத்தை அல்லது ஈறு நோயைத் தடுக்காது. ஏனெனில் பல் துலக்குவதன் மூலம் மட்டுமே பிளேக்கை முழுமையாக அகற்ற முடியாது. எனவே பற்களில் தங்கியுள்ள உணவு துணுக்குகளை அகற்ற நீங்கள் வாய் கொப்பளித்தும், பற்களுக்கான ஃப்ளோஸ் கொண்டும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
பல் மருத்துவரிடம் சென்று எத்தனை முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும்?
வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையெனும், பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்வது நல்லது. உங்கள் பற்களை சுத்தம் செய்வதன் முக்கிய நோக்கம், சிறந்த வாய் ஆரோக்கியத்தை பேணுவதாகும்.
பிற உடல்நலப் பிரச்சினைகள் பல் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?
ஈறுகளில் இரத்தப்போக்கு, வாய் துர்நாற்றம், நாள்பட்ட வாய் புண்கள் மற்றும் பல் உணர்திறன் ஆகியவை பொதுவான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். அதனால்தான், பெரியவர்களுக்கு வருடாந்திர பல் பரிசோதனை மற்றும் குழந்தைகளுக்கு வருடத்திற்கு இரு முறை பல் பரிசோதனை செய்வது செய்வதன் அவசியத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
பல் ரீதியான ஒரு அவசர நிலை உருவாகுமா? அதை எவ்வாறு கையாள்வது?
துண்டிக்கப்பட்ட பற்கள், லேசான பல் வலி அல்லது ஈறுகளில் லேசான இரத்தப் போக்கு போன்ற கோளாறுகள் அவசர நிலையாக வகைப்படுத்த முடியாது. உடைந்த தாடை, பல் சீழ் காரணமாக ஏற்படும் வலி, சிதைந்த பல், ஆகியவை உடனடி பல் பராமரிப்பு தேவைப்படும் மிகவும் தீவிரமான நிலைமைகளாகும். இது போன்ற தருணங்களில் உங்கள் அருகில் உள்ள பல் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
பல் சிதைவை அதன் ஆரம்ப கட்டங்களில் சிகிச்சை செய்வது ஏன் முக்கியம்?
பல் சொத்தையானது பல்லின் மையத்தில் இருந்து தொடங்குகிறது என்பது தவறான நம்பிக்கை . உண்மையில் இது , பல்லின் வெளிப்புற அடுக்கான பற்சிப்பியில், பிளேக் பாக்டீரியா மூலம் வெளிப்படும் அமிலங்கள் தாக்குவதால் உருவாகிறது.சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சிதைவு டென்டின் அடுக்கு மற்றும் பல்லின் அடிப்பகுதி வரை முன்னேறும். இந்த சிதைவின் விளைவாக துவாரங்கள், சீழ்கள் மற்றும் பற்கள் இழப்பு கூட ஏற்படலாம். அதனால் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிப்பது நல்லது.
பல் செயல்முறைகளை வலியற்றதாகவும் வசதியாகவும் செய்ய ஏதேனும் முறைகளைப் பின்பற்றுகிறீர்களா?
4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரியில், பல் சிகிச்சையின் போது நோயாளிகளின் வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பல் சிகிச்சையின் போது ஏற்படக்கூடிய வலி மற்றும் அசௌகரியத்தைக் குறைப்பதற்கான சரியான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதில் இங்குள்ள பல் மருத்துவர்கள் சிறப்பு பெற்றவர்களாக திகழ்கிறார்கள். நோயாளிகள் முற்றிலும் நிதானமாக இருப்பதை உறுதிசெய்ய தேவையான சமீபத்திய பல் மயக்க மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும் அறியகுறைவாக காட்டு
Dental professional with stethoscope in a hospital setting with medicine bottles nearby.
உங்கள் பல் ஆரோக்கியம் எங்கள் பொறுப்பு
4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி தனது உயர்ந்த மருத்துவ சேவை மூலம் முழுமையான, நவீன பல் மருத்துவத்தில் தனக்கென ஒரு சிறந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது. பல் சம்பந்தபட்ட எவ்வித கோளாறாக இருப்பினும், உடனடியாக எங்களை அனுகுங்கள்.
தொடர்பு கொள்ள
எங்கள் கிளைகள்
மேடவாக்கம் பல் மருத்துவமனை

6/13, முதல் தளம்,
வேளச்சேரி மெயின் ரோடு,
மேடவாக்கம், சென்னை,
தமிழ்நாடு - 600100.

கௌரிவாக்கம் பல் மருத்துவமனை

141-168, வேளச்சேரி சாலை,
புதிய குணக்குறிச்சி, கௌரிவாக்கம்,
செம்பாக்கம், சென்னை,
தமிழ்நாடு - 600117.

Top