Logo of 4 Squares Dentistry
முன்பதிவிற்கு
ஆரோக்கியமான புன்னகை அனைவருக்கும் சாத்தியம்
உங்கள் புன்னகையை மீட்டெடுக்க எங்களை அணுகுங்கள்
முன்பதிவு செய்ய
உங்கள் புன்னகையை மீட்டெடுக்கும் பல் சிகிச்சை

மேடவாக்கத்தில் உள்ள சிறந்த பல் மருத்துவமனை

மேடவாக்கத்தில் உள்ள முன்னணி பல் மருத்துவமனையான 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரிக்கு உங்களை வரவேற்கிறோம். நவீன பல் பராமரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வலியற்ற, வசதியான சிகிச்சை மூலம் உங்கள் பல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம். எங்களின் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த பல் மருத்துவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், கூடுதல் அக்கறையுடனும் சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.

4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரியில் மேம்படுத்தப்பட்ட மற்றும் உயர்ந்த பல் பராமரிப்பை வழங்குவதன் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பல் சிகிச்சை தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். எங்களின் மேடவாக்கம் பல் மருத்துவ மையம் அதிநவீன உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் அறிய
Front image of 4 Squares Dentistry, Medavakkam
மேடவாக்கத்தின் சிறப்புமிக்க பல் சிகிச்சை மையம்
நியாயமான விலையில் உங்கள் முழு குடும்பத்திற்குமான தரமான பல் பராமரிப்பு சேவைகள்
எங்களை அணுக
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை, மாடம்பாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம், செம்பாக்கம், சந்தோசபுரம், மேடவாக்கம் கூட்டு சாலை மற்றும் சித்தலபாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து எளிதில் அணுகக்கூடிய வகையில், முக்கியமான புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தில் எங்கள் 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி பல் மருத்துவமனை அமைந்துள்ளது. வளரும் புறநகர்ப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் இருப்பதால் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை எளிதாக அணுகலாம்.
மேடவாக்கத்தின் சிறப்புமிக்க பல் சிகிச்சை மையம்
நியாயமான விலையில் உங்கள் முழு குடும்பத்திற்குமான தரமான பல் பராமரிப்பு சேவைகள்
எங்களை அணுக
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை, மாடம்பாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம், செம்பாக்கம், சந்தோசபுரம், மேடவாக்கம் கூட்டு சாலை மற்றும் சித்தலபாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து எளிதில் அணுகக்கூடிய வகையில், முக்கியமான புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தில் எங்கள் 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி பல் மருத்துவமனை அமைந்துள்ளது. வளரும் புறநகர்ப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் இருப்பதால் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை எளிதாக அணுகலாம்.
goup of highly qualified Dentist

மேடவாக்கத்தின் சிறந்த பல் மருத்துவர்களாக நாங்கள் ஏன் விளங்குகிறோம்?

கௌரிவாக்கம் மற்றும் மேடவாக்கத்தில் இயங்கும் 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி, தாம் வழங்கும் சிறப்பான பல் சிகிச்சை காரணமாக சிறந்த பல் மருத்துவமனை என்ற நற்பெயரைப் பெற்றுள்ளது. எங்கள் பல் மருத்துவர்கள் மிகவும் தகுதி வாய்ந்தவர்கள், நன்கு பயிற்சி பெற்றவர்கள், மிகவும் திறமையானவர்கள், மற்றும் சிறந்த பல் பராமரிப்பு வழங்குவதில் ஈடு இணையற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள். எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு பல் செயல்முறையையும் சுகாதாரமானதாகவும், வசதியாகவும், நியாயமான விலையிலும் மேற்கொள்ள நாங்கள் மிகவும் அக்கறை எடுக்கிறோம். 4 ஸ்கொயர்ஸ் பல் மருத்துவமனையில், எங்கள் பல் மருத்துவர்கள் பல் பராமரிப்பு மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளைச் செயல்படுத்த கூடுதல் தனித்துவமான அணுகுமுறையை மேற்கொள்கின்றனர்.

பற்களை வெண்மையாக்குதல், சொத்தை பற்கள் முழுவதையும் மறுசீரமைத்தல், விழுந்த மற்றும் உடைந்த பற்களை புனரமைத்தல், முக அழகை புனரமைத்தல் போன்ற தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஒப்பனை சிகிச்சைகள், மற்றும் செயல்முறைகளை நாங்கள் வழங்குகிறோம். இவ்வாறு, மிகுந்த அர்ப்பணிப்புடன் நாங்கள் ஆற்றும் மருத்துவ சேவை மூலம், மேடவாக்கத்தின் சிறந்த பல் மருத்துவமனை என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளோம்.

இந்திய பல் மருத்துவ கவுன்சில் நிறுவிய அனைத்து நடைமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் நாங்கள் முறையாக பின்பற்றுகிறோம்.

மேடவாக்கத்தின் தலைசிறந்த பல் மருத்துவமனை

Icon Skilled team of Dentist

திறமையான பல் மருத்துவர் குழு

பல் பராமரிப்புக்கான தனித்துவமான அணுகுமுறை மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளை செயல்படுத்துகிறோம்.
Icon Skilled team of Dentist

புதுமையான தொழில்நுட்பங்கள்

மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அண்மை கால மருத்துவ வழிமுறைகள் பின்பற்றி தனித்துவமான பல் தீர்வுகள்.
Icon Skilled team of Dentist

பாதுகாப்பில் முன்னுரிமை

எங்களின் பல் மருத்துவமனையில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கவனிப்பு ஆகியவற்றின் தரநிலைகளை எவ்வித குறைபாடும் இன்றி கடைபிடிக்கிறோம்.
Icon Skilled team of Dentist

நம்பகமான சேவை

நியாயமான செலவில் பல் பராமரிப்பு வழங்கும் பல் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள்.
Icon Skilled team of Dentist

உலகத்தரம் வாய்ந்த பல் பராமரிப்பு வசதி

வசதியான மற்றும் விசாலமான இடத்தை கொண்டுள்ள இந்த மருத்துவமனை துல்லியமான சிகிச்சைகளுடன் கூடிய தனித்துவமிக்க மருத்துவத்தை வழங்குகிறது.
Icon Skilled team of Dentist

பல் பிரச்சினைகளுக்கான ஒற்றை தீர்வு மையம்

வசதியான ஆலோசனை நேரங்கள் மற்றும் உடனடி அவசர சேவைகள் உட்பட உங்களின் அனைத்து பல் சிகிச்சை தேவைகளுக்கும் ஒரே இடமாக திகழ்கிறது.

நம்ம மேடவாக்கத்தில் சர்வதேச தரத்திலான பல் பராமரிப்பு

பல் சிகிச்சை துறையில் வளர்ந்து வரும் நவீன கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப அன்றாட மேம்பாடுகளைத் தொடர்ந்து நாங்கள் பின்பற்றி வருவதால், மேடவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நோயாளிகளுக்கு சிறந்த பல் சிகிச்சையை எங்களால் வழங்க முடிகிறது. டிஜிட்டல் எக்ஸ்ரே, உள்முக கேமராக்கள் மற்றும் பிற புதுமையான கருவிகள் உங்கள் வாய் ஆரோக்கியத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை எங்களுக்குத் தருகின்றன. 4 ஸ்கொயர்ஸ் டென்டிஸ்ட்ரி பின்வரும் நன்மைகளைக் கொண்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

  • சரியான நோயறிதலையும் துல்லியமான சிகிச்சைத் திட்டத்தையும் உறுதிசெய்யும் வகையில் விரிவான படங்கள்.
  • பட மதிப்பாய்வுக்கான காத்திருப்பு நேரம் முற்றிலும் குறைகிறது.
  • பல் நிபுணருடன் ஆய்வு படங்களை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
  • கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைத்து நோயாளியின் பாதுகாப்பை அதிகரிக்கிறது.
  • எல்லா சிகிச்சைகளிலும் ஒரு வேகமான திட்டமிடல் மற்றும் அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது.
Latest equipment and best dental treatments
எங்களிடம் உள்ள சிறந்த உபகரணங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பல் மருத்துவர்களின் உதவியுடன், நோயாளிகளுக்கு ஒரு சிறந்த பல் சிகிச்சை அனுபவத்தை நியாயமான விலையில் வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
சந்திப்பை திட்டமிடுங்கள்

பல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஈறுகளில் இரத்தம் வராமல் தடுப்பது எப்படி?

ஈறுகளில் வீக்கம் அல்லது இரத்தக்கசிவு ஏற்படுவது ஈறு அழற்சி, ஈறு நோய் காரணமாக இருக்கலாம். நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கி பிளாஸ் செய்வதன் மூலம் இதனை எதிர்கொள்ளலாம். சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெறுவதற்கு தாமதம் செய்யாமல் கௌரிவாக்கத்தில் உள்ள உங்கள் பல் மருத்துவரைப் பார்ப்பது எப்போதும் நல்லது.

பல் எக்ஸ்ரே எடுப்பது பாதுகாப்பானதா?

கதிர்வீச்சு வெளிப்பாடு மிகவும் குறைவாக இருப்பதால், பல் எக்ஸ்-கதிர்கள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் பாதுகாப்பானவை. இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பல் எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனக்கு பற்கூச்சம் வாய்ந்த பற்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் வீட்டு வைத்தியம் உள்ளதா?

தகுந்த பற்பசை பயன்படுத்துவது உங்கள் பற்களின் உணர்திறன் சங்கடத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும். இதில் பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஸ்ட்ரான்ஷியம் குளோரைடு உள்ளது. இது உங்கள் பற்களின் நரம்பு முனைகளை எரிச்சலிலிருந்து பாதுகாக்கிறது. அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்களை நீங்கள் உட்கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.

இது பற்பசையின் செயலுக்கு எதிராக செயல்படும. மேலும் உங்கள் பற்கள் மீண்டும் உணர்திறன் கொண்டதாக உணரலாம். உங்கள் பற்களின் உணர்திறன் கூடுதலாக இருப்பின், தகுந்த நிவாரணத்திற்கு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.

நான் செயற்கைப் பற்களைப் பயன்படுத்துகிறேன். பல் மருத்துவ ஆலோசனைகளை நான் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்?

நீங்கள் செயற்கைப் பற்களைப் பயன்படுத்தினால், பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைவு. இருப்பினும், உங்களுக்கு வாய் புண்கள் ஏற்பட்டாலோ அல்லது பொருத்தமற்ற பல் உபகரணங்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, கௌரிவாக்கத்தில் உள்ள உங்கள் பல் மருத்துவரை நீங்கள் சந்திக்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாவிட்டால், உங்கள் கழுத்து, முதுகு மற்றும் பற்களின் முழுமையான பரிசோதனைக்காக வருடந்தோறும் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். உங்கள் பற்களை மாற்ற வேண்டுமா அல்லது சரிசெய்ய வேண்டுமா என்பதை உங்கள் பல் மருத்துவர் பரிந்துரைப்பார்.

எனது குழந்தையின் முதல் பல் பரிசோதனைக்காக நான் எப்போது பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?

3 வயதிற்குள் உங்கள் குழந்தையின் முதல் பல் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தையின் பற்களை தவறாமல் துலக்குவதை உறுதி செய்து, அவர்களின் பல் சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் பற்களில் ஏதேனும் துவாரங்கள், இரத்தப்போக்கு, கறை அல்லது கரும்புள்ளிகளை நீங்கள் கண்டால், உடனடியாக கௌரிவாக்கத்தில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்.
மேலும் அறியகுறைவாகப் பார்க்க
Top